அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன!

Tuesday, February 7th, 2017

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கோரியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான 662 மில்லியன் ரூபா பணத்தை அர்ஜூன் மகேந்திரன் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.மத்திய வங்கியின் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

சட்டத்தை அமுல்படுத்துதலுடன், மோசடி செய்யப்பட்ட பணத்தையும் அர்ஜூன் மகேந்திரனிடமிருந்து அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

662 மில்லியன் ரூபா மோசடி குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் பதிவுத் தபால் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளேன்.மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நான் கடிதமொன்றின் மூலம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளேன்.

2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் திகதி வரையில் மத்திய வங்கியின் ஆளுனராக பதவி வகித்த அர்ஜூன் மகேந்திரன் நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை உள்ளக கணக்காய்வு அறிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது.163 சந்தர்ப்பங்களில் இவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

Lakshman-Arjuna-Mahendran-640x400

Related posts: