வெலிகடை பொலிஸாரல் தாக்கபட்ட இளைஞன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதி

Monday, March 14th, 2016

பொகவந்தலாவ கிழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 32வயது மதிக்கதக்க  கோவிந்தசாமி ஞானகண்ணா என்ற இளைஞன் கடந்த 8,9ம் திகதி இரண்டு நாட்களாக வெலிகடை பொலிஸாரால் தடுத்து வைக்கபட்டு கடுமையாக தாக்கபட்ட இளைஞன் 11.03.2016 அன்று இரவு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக  பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கொழும்பு வெலிகடை பகுதியில் ஆடைதொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் கடந்த மாதம் 11ம் திகதி பொகவந்தலாவையில் இருக்கும் தனது வீட்டுக்கு விடுமுறை பெற்று கொண்டு வந்திருத்த போது குறித்த இளைஞனின் மனைவியின் வங்கி கணக்கு இலக்கத்திற்கு 15 ஆயிரம் ரூபா ஆடைதொழிற்சாலையின் உரிமையாளர் வைப்பிலிடப்பட்டதாகவும் பணத்தை பெற்று கொண்ட இளைஞன் மீண்டும் ஆடைதொழிற்சாலைக்கு தொழிலுக்கு செல்லாமை இருந்ததன் பொருட்டு குறித்த ஆடைதொழிற்சாலையின் உரிமையாளர் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்து இருந்தமை குறிப்பிடதக்கது.

முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட வெலிகடை பொலிஸார் கடந்த 07ம் திகதி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்க்கு, கோவிந்தசாமி ஞானகண்ணா என்பவரை வெலிகடை பொலிஸ் நிலையத்திற்க்கு வருமாறு தகவல் அனுப்பபட்டமைக்கு அமைய குறித்த இளைஞன் 08ம் திகதி வெலிகடை பொலிஸ் நிலையத்திறக்கு சென்றிருந்தார்.

வெலிகடை பொலிஸ் நிலையத்திற்க்கு சென்ற இளைஞனை தான் இரண்டு இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையடித்து உள்ளாதாகவும் இந்த குற்றசாட்டினை ஏற்றுகொள்ளுமாறு கூறி குறித்த இளைஞனை வெலிகடை பொலிஸார் கடுமையாக தாக்கியதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கோவிந்தசாமி ஞானகண்ணா 12.03.2016 அன்றைய தினம் முறைபாட்டினை பதிவுசெய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கபட்ட இளைஞனுக்கு வெலிகடை பொலிஸாரால் கடந்த 10ம் திகதி பினைவழங்கபட்ட பிறகு குறித்த இளைஞன் 12.03.2016 அன்றைய தினம் வெலிகடை பொலிஸாருக்கு எதிராக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இளைஞனின் முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட பொகவந்தலாவ பொலிஸார் சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸ் வலயத்திறக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளபடயிருப்பதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

20160312_103431

Related posts: