அராலி மாணவன் மரணத்தில் சந்தேகம்: பெற்றோர் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு!

Friday, July 15th, 2016

கடந்த மே மாதம் 24ஆம் திகதி அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்த ஜெயகாந்தன் டிஷாந்தன் எனும் 16வயதான பாடசாலை மாணவன் அராலி தெற்கு மாவத்தை பகுதியில் உள்ள குடிதண்ணீர் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தற்கொலை என கூறப்பட்ட நிலையில் அது தற்கொலை அல்ல கொலை என பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது-

குறித்த பகுதியில் உள்ள பெண்ணொருவரும் இளைஞன் ஒருவனும் காதல் தொடர்பு கொண்டிருந்த நிலையில் அது தொடர்பில் குறித்த இளைஞன் அவர்களுக்கு உதவி செய்திருந்ததாகவும் அதனடிப்படையில் குறித்த பெண்ணின் தந்தைக்கும் இவ் மாணவனது குடும்பத்திற்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த சம்பவத்தால் மனவேதனை அடைந்தமையாலேயே குறித்த மாணவன் கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் விசாரணைகளில் தெரிவித்திருந்தனர்.

இருந்த போதிலும் குறித்த சம்பவம் தற்கொலையல்ல கொலை என்ற சந்தேகம் நிலவுவதாக குறித்த மாணவனின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக யாழ் மாவட்ட மனிதவுரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளதாவது – குறித்த உறவினர்களால் முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றிருப்பதாக தெரிவித்த அவர். இச் சம்பவத்தை விசாரணை செய்த வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து இவ் விசாரணை அறிக்கை தொடர்பான விளக்கத்தை கோரியிருந்ததாகவும் அவர்கள் அவ் விளக்க அறிக்கையை சமர்பித்துள்ளார்கள் என்றும் இதனைவிட சட்ட வைத்திய அதிகாரியிடமும் இச் சம்பவம் தொடர்பான பரிசோதனை அறிக்கையை கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: