அராலியில் டெங்குத் தொற்று : 10 பேர் சிகிச்சையில் சேர்ப்பு !

Tuesday, August 7th, 2018

வலி.மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட அராலி மேற்கு பிரதேசத்தில் டெங்குத் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த மூன்று வாரங்களில் அராலி தெற்கில் 10 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்குத் தாக்கத்தினை அடுத்து சங்கானை சுகாதார மருத்துவப் பணிமனை மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவப் பணிமனை மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஊழியர்கள் இணைந்து அராலி தெற்கு முழுவதுமாக டெங்குக்கு எதிராக புகையடிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அராலி முழுவதுமாக உள்ள வீடுகளின் சுத்தங்களைப் பார்வையிட்டு வருவதுடன் கோம்பை, சிரட்டை, ரின் பேணிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை வைத்திருப்போருக்கு விழிப்புணர்வூட்டி வருவதுடன் சேகரிக்கப்பட்ட பொருள்கள் பொருத்தமான தொழில்நுட்ப முறையில் அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீட்டின் சூழலை அசுத்தமாக வைத்திருக்கும் மக்களுக்கு எதிராக சட்டத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


ஹோட்டல்களில் திருமண வைபவங்களை நடத்த இன்றுமுதல் அனுமதி - சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்ச...
நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே இலங்கைக்கு வருகை தர முடியும் - சுற்றுலா மற்றும் சிவில் விம...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான வயதெல்லை அதிகரிப்பு - தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்...