நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே இலங்கைக்கு வருகை தர முடியும் – சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவிப்பு!

Tuesday, December 15th, 2020

நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே  வருகை தர முடியுமென சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

விமான நிலையங்களை மீள திறக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக சிவில் விமான சேவைகள் அமைச்சு மேலும் கூறுகையில்- ‘நாட்டுக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலா பயணிகளையும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 58 ஹோட்டல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஹோட்டல்கள், கொரோனா தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கமைவாக முன்னெடுக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள், பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் தவிர்ந்த ஏனைய ஹோட்டல்களை கோருவார்களாயின்,  சுகாதார அதிகாரிகளின் பரிந்துரை அவசியமாகும்.

அத்துடன் நாட்டுக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கட்டாயமாக ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

இதேவேளை எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார தரப்பினரின் கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது’ எனவும் சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: