அரச சேவைகள் ஆணைக்குழுவினால் விசேட குழுக்கள் நியமனம்!
Wednesday, November 9th, 2016
அரச சேவைகள் ஆணைக்குழுவினால் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்களுக்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த அமைச்சுக்களில் சேவையாற்றும் ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் அராயவே இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை இந்த குழுக்களில் அங்கத்தவர்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அமைச்சுக்களில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒழுகாற்று தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்க இந்த குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளதாக அரச சேவைகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:
சாட்சியின் பாதுகாப்பு கருதி சந்தேகநபரின் பிணை இரத்து!
பிரதமரின் கண்காணிப்பின் கீழ் மாத்தறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்!
நிர்மாணத் துறையில் ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக...
|
|
|


