அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிக்கியிருந்த இரு கப்பல்கள் மீட்பு!
Sunday, December 11th, 2016
இதுவரை காலமும் அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணியாற்றிய தங்களை துறைமுக அதிகார சபையில் இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து ஊழியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் ஆளணி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலரால் நேற்று முன்தினம் (08) ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் காரணமாக துறைமுகத்தின் அன்றாட பணிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆளணி நிறுவனத்தைச் சேர்ந்த 483 பேர் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துறைமுகத்தின் நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நோக்கில், குறித்த சத்தியாகிரக போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கையின்போது ஊழியர்களுக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் பதற்றமான நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது ஆர்ப்பாட்டக்கார்களின் கட்டுப்பாட்டில இருந்த இரு கப்பல்களை கடற்படையினரால் மீட்கப்பட்டது

Related posts:
|
|
|


