அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தம் – வளாக முதல்வர் !

Thursday, March 15th, 2018

வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்பாக புதன்கிழமை வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கருத்து கூறுகையில்:

28.02.2018 இல் இருந்து இலங்கையில் உள்ள கல்விசாரா ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தினால் எமது வளாகத்தின் கல்வி சார், கல்வி சாரா செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

13.03.2018 அன்று பீடாதிபதிகள், துறை தலைவர்கள் கூடி கல்வி சாரா ஊழியர்களின் தொழிற் சங்கப் போராட்டம் முடிவடைந்த பின்னர் எங்களது கல்வி நடவடிக்கைகளையும் ஆரம்பிப்பது என்று தீர்மானம் எடுத்துள்ளோம்.

பரீட்சைகள் அனைத்தும் முன்பே முடிவடைந்துள்ளன. 12.02.2018 அன்று வியாபார கற்கைகள் பீடத்தின் புதிய ஆண்டிற்கான கற்கை நெறிகள் மட்டுமே ஆரம்பமாகியிருந்தன. அப்போது கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் வழங்க முடியாத காரணத்தினால் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் இடைநிறுத்தியிருந்தோம். மேலும் 03.03.2018 அன்று நடைபெறவிருந்த பிரயோக விஞ்ஞான பீடத்தின் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறிக்கு அனுமதிப்பதற்கான விவேக நுண்ணறிவுப் பரீட்சையானது தற்போது பிற்போடப்பட்டுள்ளது. அத்துடன் இப்பரீட்சைகளுக்கான திகதியும் 19.03.2018 தொடங்க இருந்த பிரயோக விஞ்ஞான கற்கை நெறிகள் கற்கை நெறிக்கான திகதியும் இப்போராட்டம் முடிவடைந்த பின்னர் பத்திரிகை வாயிலாக அறிவிக்கப்படும் என்றார்.

Related posts: