தனிநபர் கணினி தொழிற்துறையில் பாரிய வீழ்ச்சி!

Sunday, October 16th, 2016

ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமான Gartner-இன் தரவுகளின் படி, உலகளாவிய ரீதியில், தனிநபர் கணினி விற்பனையானது, 2016ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில், 68.9 மில்லியன் தனிநபர் கணினிகளால், 5.7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறித்த தரவானது, தொடர்ச்சியாக எட்டாவது காலாண்டில், தனிநபர்க் கணினி தொழிற்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், தனிநபர்க் கணினி தொழிற்துறை வரலாற்றில் இதுவே நீண்டகால வீழ்ச்சி ஆகும் என, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (11), Gartner வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னரான காலப்பகுதியில் காணப்பட்ட மோசமான விற்பனைகள், வளர்ச்சியடைந்து வரும் சந்தைகளில், தனிநபர்க் கணினிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடைந்தமையே, தனிநபர்க் கணினி தொழிற்துறை வீழ்ச்சியடைந்தமைக்கான காரணமாக Gartner தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், மிகப்பெரிய பிரச்சினையாக, குறிப்பிட்ட சில காலமாகவே தனிநபர்க் கணினி தொழிற்துறை வீழ்ச்சியடைவதுடன், இன்னும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திறன்பேசிகளினாலேயே, தனிநபர்க் கணினிகள் வீழ்ச்சியடைவதற்கான பிரதான காரணியாக இருக்கின்றது. தனிநபர்க் கணினிகளிலும் பார்க்க, குறிப்பிட காலகட்டத்தில், திறன்பேசிகள் இற்றைப்படுத்தல்களைக் கொண்டிருப்பதுடன், தனிநபர்க் கணினிகள், மடிக்கணினிகளுடன் போட்டியிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கின்றன.

தனிநபர்க் கணினி தயாரிப்பு நிறுவனங்கள், அழுத்தத்தை எதிர்கொள்கையில், HP, Dell, Asus ஆகிய நிறுவனங்கள், குறைந்த தனி இலக்க எண்ணிக்கையான வளர்ச்சியைக் கொண்டுள்ளன. இது தவிர, Acer, Apple, Lenovo ஆகிய நிறுவனங்களும் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளன. இதேவேளை, இங்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் தவிர, ஏனைய நிறுவனங்களை உள்ளடக்கிய தனிநபர்க் கணினி தொழிற்துறையும் 16 சதவீத வீழ்ச்சியைக் கண்டுள்ளது

article_1476275464-Pc-decline

Related posts: