அனுமான வயதுச்சான்றிதழ் பெறுவது எப்படி!
Saturday, January 14th, 2017
பிறப்பினை பதிவுசெய்ய முடியாத வயது 14ஐ விட குறைந்த பிள்ளைகள் தொடர்பாக அனுமான வயதுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கப்படுவது,
- அரசின் அனுமதிபெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள்
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள்
- அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள்
பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
- பிள்ளை காப்பகத்தின் நிர்வாகியின் சத்தியக்கூற்று
- அரசின் வைத்திய அலுவலர் மூலம் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
- பிள்ளை சம்பந்தமான விபரத்தினை உள்ளடக்கிய வேறு ஆவணங்கள் (இருந்தால் மட்டும்)
அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்
- பாதுகாவலரின் சத்தியக்கூற்று
- பிள்ளை பாதுகாவலரின் பாதுகாப்பில் உள்ளார் என உறுதிப்படுத்தக்கூடிய
- கிராம அலுவலரின் சான்றிதழ் அல்லது
- சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு அலுவலரின் சான்றிதழ் அல்லது
- சமூக சேவைகள் திணைக்களத்தின் சான்றிதழ் அல்லது
- பொலிஸ் பரிசோதகரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்
- அரசின் வைத்திய அதிகாரியினால் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்
- சுகாதார வளர்ச்சி குறிப்பின் பதிவேடு
- பிள்ளை பாடசாலை செல்லுமாயின் பாடசாலையில் அனுமதித்த பதிவேட்டின் பிரதி

Related posts:
பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெல...
2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
ஜனாதிபதி ரணில் - சவுதி அரேபிய அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் சந்திப்பு - பொருளாதார உறவுகளை மேலும் வல...
|
|
|
தென்மேற்கு பருவக்காற்று நிலையின் காரணமாக பலத்த காற்று - கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்க...
அனைத்து இலங்கையர்களும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவரதன பகிரங்கம் கோர...
விவசாய துறையின் அனைத்து நிதி திட்டங்களுக்கும் அங்கீகாரம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!


