பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Wednesday, December 23rd, 2020

மின்சார சபையில் சில திட்டங்களை வேண்டுமென்றே ஒத்திவைக்கும் வேலைத்திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவில் இடம்பெறுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளஅமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல இந்த ஆணைக்குழுவை அரசாங்கம் இரத்து செய்வதற்கு தீர்மானம் மேற்கொண்டமைக்கு இதுவும் ஒரு காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்..

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் குறித்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் சேவை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு துரிதமான புதிய வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நாம் ஒரு வருட காலமாக அவதானித்தோம். திட்டங்கள் தொடர்பிலான கால தாமதம் இடம்பெறுவதை எம்மால் உணரக்கூடியதாக இருந்தது. சட்ட ரீதியில் மீண்டும் இவ்வாறான ஒன்றை நியமிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதேபோன்று இந்த செயற்பாட்டு விடயங்களை நீதியான முறையில்; நடைமுறைப் படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எமக்கு மக்கள் 3/2 பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளனர். பொதுமக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் எதிர்க்கொள்ளப்பட்டால் அதற்கு மாற்றீட்டு நடவடிக்கை மேற்கொள்வது முக்கியமானதாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: