இலங்கையின் நலனில் அக்கறை: பிரதமர் ரணிலிடம் சோனியாகாந்தி!
Friday, April 28th, 2017
தமது கட்சி எப்போதும் பிராந்திய நலன்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே செயல்படும் என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க குழுவினருக்கும் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையில் புது டெல்லியில் இடம் பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையே வரலாற்று உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களிற்கு உதவி வழங்கப் பட வேண்டும் என்றும் சோனியா காந்தி அதன்போது தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் பிராந்திய அரசியல் மற்றும் சமூகநலன் சார் விடயங்களும் ஆராயப் பட்டன.
Related posts:
ஊரங்கு உத்தரவவை மீறினால் கைது - சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா எச்சரிக்கை!
வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பும் அரசாங்கம் வழங்கும் – ...
எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் - அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
|
|
|


