அனுமதிப்பத்தரமில்லாத 20 பேருந்துகள் யாழ்-கொழும்பு சேவையில்!

Thursday, February 16th, 2017

யாழ்ப்பாணம் – கொழும்பு பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் 20 பேருந்துகளுக்கு அனுமதிப்பத்திரம் கிடையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதிப்பத்திரம் இல்லாத ஐந்து பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகளுக்கு இரண்டு இலட்சம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும் வகையில் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

jaffnabus

Related posts: