அதிபர் வெற்றிடத்தை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஓய்வு நிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன்

பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும்போது மறுநாளே பொருத்தமான அதிபரை நியமிப்பதற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓய்வு நிலை வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்கினேஸ்வரன்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
நாங்கள் பதவியில் இருந்த காலத்தில் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும் போது விரைவாக அதிபர்களை நியமித்தோம். இன்று தேசிய பாடசாலைகளில் கூட பொருத்தமான அதிபர்கள் நியமிக்கப்படுவதில்லை.
இந்த விடயத்தில் மாகாண சபை உறுப்பினர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அக்கறை செலுத்த வேண்டும். திறமைமிக்க அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாடசாலை நிர்வாகத்தில் பெற்றோர், பழைய மாணவர்கள் அதிபர்களுக்குத் தலையிடியைக் கொடுக்கக் கூடாது. அதிபர்களின் வினைத்திறனான செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
Related posts:
அதிக வெப்பம் : யாழ்ப்பாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீருக்கு நிதி ஒதுக்கீடு!
10,588 மாணவர்கள் மேலதிக உள்ளீர்ப்பு - பல்கலைக்கழகங்களில் வசதிகளை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்து!
சுகாதார பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ஆபத்தான நிலையை சந்திக்க நேரிடும் - சுகாதாரப் பிரி...
|
|
கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருக்கின்ற போதும் அதன் வீழ்ச்சி வேகம் மிகக் குறைவு – உலக சுகாதார ஸ்தாப...
வடக்கிற்கு புதிய பொருளாதார திட்டம் - அபிவிருத்தியின் வேகம், மக்களின் அர்ப்பணிப்பிலேயே தங்கியுள்ளது –...
வறட்சியான காலநிலையால் இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்தியந...