அடுத்த வருடம் எட்கா உடன்படிக்கை கைச்சாத்தாகும்!
Monday, October 3rd, 2016
அடுத்த வருடம் மார்ச் மாதம் இலங்கை மற்றம் இந்தியாவிற்கு இடையிலான எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த உடன்படிக்கை இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திடபடவுள்ளதாக முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது, ஆனால் இந்த உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதால் கைச்சாத்திடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அண்மையில் இந்தியாவின் வர்த்தகத் துறை இராஜாங்க அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இலங்கை வருகை தந்திருந்தார். எனினும் எட்கா உடன்படிக்கை தொடர்பிலான அடுத்த கட்ட பேச்சவார்த்தை இந்தியாவில் விரைவில் இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
வடக்கில் மேலும் 36 பேருக்குக் கொரோனா தொற்று!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!
அதிகம் கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்கத் தயார் - சீன பிரதமர் சர்வதேச நாணய நி...
|
|
|



