தொடர் மழை : குடாநாட்டில் 2,107 பேர் பாதிப்பு!

Wednesday, November 8th, 2017

கடந்த ஒரு வாரகாலமாக குடாநாட்டில் தொடர்ந்து கொட்டுகிறது கனமழை. இடைவிடாது கொட்டும் மழையினால் யாழ்.குடாநாட்டில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

தொடர் மழையால் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீதிகள் பலவும் சேதமாகியுள்ளன. கொட்டித் தீர்க்கும் மழையினால் மக்களும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக யாழ்.மாவட்டத்தில் 622 குடும்பங்களைச் சேர்ந்த 2,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் பெய்து வரும் மழை தொடர்பான விடயங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

தாழ் நிலப்பரப்பில் வாழும் குடும்பங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. உடுவில், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் உள்ள 17 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இடைத்தாங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவை யாழ்.மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் ஆகியன வழங்கி வருகின்றன ௲ என்றார்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அவை அழுகி அழியும் கட்டத்தில் உள்ளன. மரக்கறிப்பயிர்களும் வெள்ளம் தேங்கி அழுகியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

Related posts:


எதிர்கால திட்டங்களை பூர்த்தி செய்யும் பொறுப்பு அமைச்சின் செயலாளர்களிடமே உள்ளது - அமைச்சரவை அந்தஸ்துள...
எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் - நுகர்வோர்களிடம் லிட்ரோ நிறுவனத்தின் த...
இக்கட்டான நேரத்தில் இந்தியா, இலங்கையுடன் நிற்க வேண்டியதன் அவசியத்திற்கு இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் க...