அக்கராயன் அண்ணா சிலையடியில் இருந்துகாட்டம்மன் கோயில் வரையிலான வீதியைப் புனரைத்துத் தருமாறுமக்கள் கோரிக்கை

Saturday, May 27th, 2017

கிளிநொச்சிஅக்கராயன் அண்ணாசிலையடியில் இருந்துகாட்டம்மன் கோயில் வரையிலானவீதி சேதமடைந்துள்ளதன் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அக்கராயன் சுபாஸ் குடியிருப்புபகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோதமாக இடம்பெற்றுவரும் மணல் அகழ்வு காரணமாக குறித்தவீதிசேதமடைந்தள்ளது.

இப்பகுதியில் 50க்கும் மேற்பட்டகுடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில் குறித்த வீதியைபுனரமைத்துத் தருமாறு துறைசார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படவில்லையென்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்பாதை செப்பனிடப்படாத காரணத்தினால் அக்கராயன் மகாவித்தியாலயத்திற்குச் செல்லும் மாணவர்கள் நாளாந்தம் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறிப்பாகமழை நேரங்களில் பாடசாலைக்கு நேரத்திற்கு சமூகமளிக்க முடியாத நிலையுள்ளதாகவும், இதன் காரணமாகமாணவர்களின் நாளாந்தகல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படும் அவலம் உள்ளதாகவும் பெற்றோர் கவலைதெரிவித்துள்ளனர்.

அத்துடன் தமதுதேவைகளின் நிமித்தம் அரசதிணைக்களங்களுக்கும், வைத்தியசாலை, சந்தைபோன்ற தேவைப்பாடுகளின் நிமித்தம் செல்லும் தமதுஅவலநிலைதொடர்பில் எவரும் அக்கறை செலுத்தவில்லையென்றும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே ஆரோக்கியபுரத்தின் வயல் நிலங்களிலும்,அக்கமணியங்குளத்தின் பிற்பகுதியிலும் தொடர்ச்சியாகமணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், இவ்வாறான சட்டவிரோதமணல் அகழ்வைத் தடுத்துநிறுத்தும் அதேவேளை,குறித்தவீதியைப் புனரைமத்துத் தருமாறும் மக்கள் தொடர்ச்சியாககோரிக்கைவிடுத்துவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

Related posts:

நாள் ஒன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி அறிவிப்பு!
இன்றுமுதல் பயணிகள் பேருந்துகளை கண்காணிக்கும் பணியில் இரகசிய பொலி அதிகாரி - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அற...
இலங்கையில் தொழு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக...