அக்கராயனில் சட்ட விரோத செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்கு வந்தது – பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி!

Tuesday, December 20th, 2016

அக்ராயன் பிரதேசத்தில் சட்ட விரோத செயற்பாடுகள் குறைவடைந்து உள்ளதாக அக்ராயன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார். அக்ராயன் கெங்காதரன் குடியிருப்பில் கலைமகள் சனசமூக நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கசிப்பு, கஞ்சா, பாவனைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிவில் பாதுகாப்புக் குழுக்களை கிராம ரீதியாக அமைத்துள்ளோம். மணல் அகழ்வும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காடழிப்பு மழை வீழ்ச்சி குறைவிற்கான முக்கிய காரணமாகவுள்ளது. சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் வழங்குகின்ற தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மக்கள் தகவல்களை வழங்க வேண்டும் எதிர்காலத்தில் இச்சனசமூக நிலையத்திற்கு நூல்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

 sri-lanka-police

Related posts: