“NARA” மற்றும் NAQDA நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர பணிப்புரை!

Monday, April 6th, 2020

கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள தேசிய நீரியல் வளங்கள் ஆராட்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம் – ( “நாரா – “NARA”)  மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ்’ உயிரின அபிவிருத்தி அதிகாரசபை (நக்டா – NAQDA) நிறுவனங்களில் உள்ள கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் (PCR)  இயந்திரங்களை சுகாதார துறையினருக்கு வழங்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள புத்தளம் கல்பிட்டிய பிரதேச தேசிய நீரியல் வளங்கள் ஆராட்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகத்தின் (“NARA”) அலுவலகம் மற்றும் விடுதிகளையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களென சந்தேகிக்கப்படுபவர்களை தங்கவைப்பதற்கான தனிமைப்படுத்தும் மையம் அமைப்பதற்காக வழங்குமாறும் குறித்த நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் நவரட்ணராஜாவுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் நாளாந்தம் பலர் வைத்தியசாலைகளிலும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில் சுகாதார மற்றும் மருத்துவ துறையினர் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலைவயில் இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா நோயாளிகளை பரிசோதனை செய்வதற்கான இயந்திரங்கள் குறித்த இரு நிறுவனங்களிடமும் இருக்கும் நிலையில் அந்த சோதனைகளை இலகுபடுத்துவதற்காக குறித்த இயந்திரங்களை மருத்துவத்துறையினருக்கு வழங்குமாறு அமைச்சர் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: