13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கூறியிருக்கும் இந்திய பிரதமருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிப்பு!

Friday, November 29th, 2019

13 வது திருத்த அமுலாக்கமே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு சமவுரிமை – கௌரவம் என்பவற்றை உறுதிப்படுத்தும் நிலையான செயற்பாடாகும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இன்று இந்தியா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களிடம் தெரிவித்திருப்பதையிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் சார்பில் நன்றிகளையும் தெரிவிப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்கள் இந்திய பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேச்சுக்களை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்கள் இந்திய பிரதமரிடம் எமது நாட்டுக்கும் குறிப்பாக தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை தரும் வகையில் பல்வேறு விடயங்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் எல்லை தாண்டி கடற் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளைகளில் கைதுசெய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகள் உள்ளிட்ட தொழில் துறை உபகரணங்களை விடுவிப்பது தொடர்பிலும் கூறியிருப்பது எமக்கு மிகுந்த நம்பிக்கை தருகின்றது.

அந்தவகையில் நாம் கடந்த மூன்று தசாப்தங்களாக வலியுறுத்திவரும் 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுவது அவசியம் என

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களது இந்திய விஜயத்தில் வலியுறுத்தப்பட்டதானது எமது மக்களுக்கு நம்பிக்கை தந்துள்ளதுடன் அதற்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
நுண்கடன்கள் எமது மக்களை தற்கொலை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
கிளிநொச்சி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்ச...