வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு: ஆட்சி ஏறியவுடன் 30 ஆயிரம் பேருக்கு நியமனம் – கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
Monday, October 28th, 2019
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வருகைதந்திருந்தபோது ஶ்ரீலங்கா பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவற்றுக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் முன்வைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் வாழும் ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்ததுடன் அதன் முதற்கட்டமாக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் உடனடியாக 30 ஆயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஏனையோருக்கும் விரைவாக தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்களின் நலனுக்காக செயற்படுத்துங்கள் - கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாகிகள் ...
சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும் – ஈவினை தமிழ் கலவன் பாடசாலை...
மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை - கடற்றொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அக்கறை!
|
|
|
கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோ...
இலாபம் ஈட்டுகின்ற துறையாக இல்லாது மக்கள் நலன் கருதிய துறையாக போக்குவரத்து சேவை இருக்கவேண்டும்!
தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்....


