மோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Saturday, December 14th, 2019


நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற கடற்றொழில் சார்பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்கவேண்டிய கடப்பாடுதனக்கு இருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

கொழும்பு, மோதரைபிர தேசத்திற்கு இன்று(14.12.2019) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அப்பிரதே சத்தில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழில் சார்மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.

இதன்போது, கடலரிப்பு மற்றும் களனிகங்கையினால் இழுத்துவரப்பட்டு மோதரை பிரதேசத்தில் கரையொதுக்கப்படும் கழிவுகளினால் ஏற்படும் சுற்றாடல் பிர்ச்சினைகள் போன்றவை பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

மேலும், கொழும்புதுறைமுக நகரதிட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்கான நஷ்டஈடு வழங்குவதற்குகடந்த அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், அவை மோதரை பிரதேசத்தில் வாழுகின்ற சுமார் 500 குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தினையும் பிதேச மக்கள் வெளிப்படுத்தினர்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடியுமானாhல் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக குறித்தநஷ்ட ஈடுகிடைப்பதற்கு முயற்சி மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

அதேபோன்று ஏனையபிரச் சினைகளுக்கும் தீர்வுகாண்பது தொடர்பில் ஆராய்வதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து ரத்நாயக்காவிற்கு பணிப்புரைவிடுத்தார்.

Related posts:


யுத்த வெற்றி இல்லை என்பதுடன் தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களும் இல்லாத நிலை வேண்டும்.! ...
தமிழ் மொழி அமுலாக்கலில் அரசு உரிய அவதானஞ் செலுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
மண் அகழப்படுவதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்குமாயின் நியாயமான தீர்வு பெற்றுத் தரப்படும் - அங்குலான...