சிலாபம் இறால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் டீசல் மற்றும் டொலர் பிரச்சினைகளுக்கு விரைவில் மாற்று ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, June 14th, 2022

சிலாபம் பிரதேசத்தினை சேர்ந்த இறால் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் டீசல் மற்றும் டொலர் பிரச்சினைகளுக்கு விரைவில் மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சிலாபம் பங்கதெனிய இறால் குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை பார்வையிட்டதன் பின்னர், பிரதேசத்தினை சேர்ந்த இறால் பண்ணை மற்றும் ஏற்றுமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறிப்பாக வடமேல் மாகாணத்தினை தளமாகக் கொண்டு செயற்படுகின்ற ஸ்ரீலங்கா நீரியல் வளங்கள் அபிவிருத்திக் கூட்டணியின் நிர்வாகிகள், டொலர் மற்றும் மின் வெட்டு பிச்சினைகளினால் ஏற்றுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 21 ஆம் திகதி விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு, எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறு...
மாகாண சபைகளின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்யும் எதுவித முயற்சிகளையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவி...
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்...