நெடுந்தாரகையின் சேவையினை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, December 9th, 2020



நெடுந்தீவிற்கான அரச பயணிகள் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தாரகை பயணிகள் படகின் போக்குவரத்து சேவையை நாளை(10.12.2020) தொடக்கம் செயற்படுத்துவற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தாரகை படகினை சேவையில் ஈடுபடுத்துவதற்கு தேவையான எரிபொருளை வீதி போக்குவரத்து அதிகார சபையின் ஊடாக பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் நாளை தொடக்கம் நெடுந்தாரகை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் வடதாரகை, குமுதினி, மற்றும் நெடுந்தாரகை ஆகிய அரச படகுகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வடதாரகை பயணிகள் படகு பழுதடைந்து திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெடுந்தீவு பிரதேச சபையினால் பராமரிக்கப்பட்டு வந்த நெடுந்தாரகை பயணிகள் படகு ஒரு தடைவை குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு சென்று வருவதற்கு சுமார் 110 லீற்றர் டீசல் தேவைப்பட்ட நிலையில் ஏற்பட்ட அதிக செலவீனம் காரணமாக குறித்த பிரதேச சபையினால் நெடுந்தாரகையின் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட புரெவி புயல் காரணமாக குமுதினி பயணிகள் படகும் பழுதடைந்துள்ள நிலையில் நெடுந்தீவிற்கான போக்குவரத்துக்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன.

குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பிரதேச மக்களினால் கொண்டு வரப்பட்டதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் குமுதினி படகினை பழுதுபார்த்து விரைவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு அறிவுறுத்தியதுடன் நாளை தொடக்கம் நெடுந்தாரகை பயணிகள் படகினை சேவையில் ஈடுபடுத்துவத்தற்கும் அதற்கு தேவையான எரிபொருளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை - பிரதம...
வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் - நாடாளுமன்றில் ட...
ஆட்சி மாற்றம் உருவானதும் தமிழ் மக்கள் எதிகொள்ளும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ...

அகிம்சை குரலுக்கு மதிப்பளித்திருந்தால்  இலங்கை இரத்தம் தோய்ந்த தீவாக மாறியிருக்காது – நாடாளுமன்றில் ...
கிழக்கின் தொல்லியல் ஜனாதிபதி செயலணி தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக் வேண்டும் ஜனாத...
கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கல...