மன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதற்கு அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா உறுதி!

மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்தார்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள பொருத்தமான நீர்நிலைகளில் இறால் வளர்ப்பு மற்றும் நண்டுப் பண்ணை போன்ற வற்றுக்கான வேலைத் திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்கான உத்தரவுகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(11.12.2019) குறித்த கலந்துரையாடல்நடைபெற்றது.
இதன்போது,கடலரிப்பு துறைமுகங்கள்மற்றும் இறங்குதுறைகளை பயன்படுத்;துவதில் நிலவிவருகின்ற நடைமுறை ரீதியானசிக்கல்கள் உட்படபல் வேறுவிடயங்களை இதன்போது மன்னார் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகளினால் எடுத்துக் கூறப்பட்டது.
மீனவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்த அமைச்சர் அவர்கள், நேரடியாக மன்னார் பிரதேசத்திற்கு விஜயம் செய்து சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்தபின்னர் நியாயமான தீர்வுகளை பெற்றுத்தருவதாகஉறுதியளித்தார்.
Related posts:
|
|