நிரந்தர தீர்வு பெற்றுத் தாருங்கள்: டக்ளஸ் எம்.பி.யிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!

Thursday, September 26th, 2019

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற போதிலும் நிரந்தர உள்ளீர்ப்பில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் தமக்கு இதற்கான தீர்வை பெற்றுத் தருமாறும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் நிரந்தர நியமனத்தில் பாதிக்கப்பட்ட சண்டிலிப்பாய் பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –

கடந்த காலத்தில் தாங்கள் அமைச்சராக இருந்தபோது எமது முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு எமக்கான கொடுப்பனவை ஓரளவு உயர்த்துவதற்கு வழிவகை செய்து தந்திருந்தீர்கள். அதன் பின்னராக இன்று வரையான காலத்தில் எமது வாழ்வியல் நிலை தொடர்பில் எவரும் கருத்தில் கொண்டது கிடையாது.

அண்மையில் ஒரு போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு எம்மை உள்ளீர்ப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அதில் 80 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் குறித்த புள்ளிகளுக்கு மேல் நாம் பெற்றிருந்தும் அதன் பின்னர் வெளியிலிருந்து வந்த பலரை இந்த உள்ளீர்ப்பில் உள்வாங்யதுடன் பல வருட அனுபவமும் குறித்த பதவி நிலைக்கான கல்வித் தரமும் கொண்டுள்ள எம்மை புறக்கணித்துள்ளனர்.

எமது எதிர்காலம் கருதியதாக இந்த தொழிலை நாம் முன்னெடுத்த வந்திருந்த போதிலும் அதற்கான அங்கீகாரம் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. இதனால் நாம் பெரிதும் மன வேதனைக்குள்ளாகியிருக்கின்றோம்.

அந்த வகையில் எமது குடும்ப நிலைமைகளை கருத்தில் கொண்டு எமது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் என அவர்கள் மேலும் கோரியிருந்தனர்.

குறித்த ஆசிரியர்களது கோரிக்கையினை கருத்திற் கொண்ட செயலாளர் நாயகம் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நியமனங்கள் வழங்குவதில் சட்ட பிரச்சினைகள் பல காணப்படுகின்றது. இருந்தும் துறைசார் தரப்பினருடன் பேசி நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை தாம் மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும்  அபிவிருத்தியின் எல்லையை எட்டவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவான...
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக்...
டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!

வெலிக்கடைப் படுகொலைக்கு நியாயம் வேண்டும் : நானே சாட்சியாகிறேன் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக...
சுழியோடிகளின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் கரிசனை - நியாயமான தீர்விற்கும் நடவடிக்கை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கோரிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியின் முழுமையான ஒத்துழைப்புடன் நிறைவேற...