இரணைமடு குளத்தில் ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் விடப்பட்டது!

Saturday, January 18th, 2020


பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஒரு லட்சம் திலாப்பியா மீன் குஞ்சுகள் கிளிநொச்சி இரணைமடு குளத்தில் விடப்பட்டது.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன்  இன்று(18.01.2020) இரணைமடு குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் இன்னும் நான்கு மாதத்தில் வளர்ந்து 100 மெற்றிக் தொன் கிலோ கிடைப்பதன் ஊடாக இப்பிரதேச மக்களுக்கு சுமார் இரண்டு கோடி ரூபாய்கள் வருமானமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

இதனிடையே  கிளாலி மீனவர்களுக்கு புதிய பொதுநோக்கு மண்டத்தை அமைச்சர் டக்ளஸ் திறந்து வைத்தார். கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சினால் புதிதாக கட்டப்பட்ட
கிளிநொச்சி கிளாலி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்திற்கான பொது நோக்கு மண்டபத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று. திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தாம் எதிர்கொள்ளும் சமூக விரோதிகளின் மண் அகழ்வு, காணி இல்லாப்பிரச்சனை மற்றும் கடற்றொழில் உபகரணத்தேவைகள் தொடர்பான கோரிக்கைகளையும் அமைச்சருடம் கையளித்தனர்.

அத்துடன் தேசிய நீர்வாழ் அபிவிருத்தி அதிகாரசபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்திற்கு கற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் மேற்கொண்டு பிரதேச நன்னீர் நிலைகளில் வைப்பலிடும் மீன் மற்றும் இறால் குஞ்சுகளின் தொகையை அதிகரிப்பது தொடர்பாக விரிவாக ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன்.  விளையாட்டுத்துறையினரிடம் துரையப்பா விளையாட்டரங்கு கையளிப்பு!
வடக்கின் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்றி...
மன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதற்கு அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா உறுதி!

யாழ். இராமநாதன் நுண்கலை அக்கடமிக்கு உத்தியோகப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் -  நாடாளுமன்றில் டக்...
இளம் சந்ததியினர் தடம் மாறிச் செல்ல இருந்த தமிழ் தலைமைகளே காரணம் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தே...
யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு விளையாட்டு மைதானம் அமையப் பெற வேண்டும் – டக்ளஸ் எம்.பி...