வேலணை – ஊர்காவற்றுறை வீதி புனரமைப்பு பணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது!
Thursday, February 29th, 2024
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட வேலணை – ஊர்காவற்றுறை வீதியின் புனரமைப்பு பணிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது
வீதிப் புனரமைப்பு திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட வீதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப்பங்களிப்புடன் இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்பதாக நாட்டில் எற்பட்ட பொருளாதார ஸ்திரதன்மை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த வீதிப் புனரமைப்பு பணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவில் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பணிப்புரைக்கு அமைவாக நாடாளாவியரீதியில் ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் இன்றையதினம் கடல்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அடிக்கல் நாட்டப்பட்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


