தாயக தேசத்தின் விடிவொன்றே தமிழ் மக்களின் புத்தாண்டு நிமிர்வாகும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, April 13th, 2019

வாழ்வெங்கும் வலிகளும் வதைகளும் சுமந்த எமது மக்களின் காலத்துயர்கள் யாவும் இரத்தப்பலிகளை தந்து மெல்லென அகன்று சென்றாலும், எமது மக்கள் சுமந்து நடந்த துயர்களுக்கு பரிகாரமாக நிரந்தர அரசியல் தீர்வொன்றை நாம் வென்றெடுப்பதே பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டின் நீடித்த மகிழ்வாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் விடுத்திருக்கும் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்து செய்தியில் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு. அபிவிருத்தியில் தமிழர் தாயகம் செழித்தெழும் தீர்வு. அரசியல் உரிமைக்கு நிரந்தரத்தீர்வு இவைகளே எமதும், எமது மக்களினதும் ஆழ்மன விருப்பங்களின் கனவுகளாகும், இவைகளை பேரம் பேசி பெறுவதற்கான போதிய அரசியல் பலத்தை தம்மிடம் வைத்திருந்தும், ஐ.நாவையும், சர்வதேச சமூகத்தையும் காட்டி எமது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிவரும் சக தமிழ் தரப்பினர் எமது மக்களுக்கு புத்தாண்டின் மகிழ்ச்சியை ஒரு போதும் தரப்போவதில்லை.
ஜனநாயகத்தை பாதுகாப்பதாக போலிக்கூச்சலிட்டு மகிந்த எதிர்ப்பை சுய இலாபங்களுக்காகாக காட்டி சூளுரைத்தவர்கள் மறு புறத்தில் தாமே தக்கவைத்தோம் என்று தம்பட்டம் அடித்து காப்பாற்றியதாக கூறும் அரசை கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட பெற்றுக்கொடுக்கவில்லை.
தமிழ் சிங்கள மக்கள் சேர்ந்து கொண்டாடும் சித்திரைப்புத்தாண்டின் மகிழ்வானது. இலங்கைத்தீவின் தேசிய இனங்களின் சமத்துவ அரசியல் உரிமையை வழங்குவதால் மட்டுமே அர்த்த பூர்வமானதாக இருக்கும். ஆகவே தமிழர் தேசத்தின் அரசியல் மாற்றமொன்றே எமது மக்களின் புத்தாண்டு வரவுகளின் புது மகிழ்வு என்பதை வரலாறு எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
இத்தகைய எதிர்கால நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்கள். இவ்வாறு புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றலும், ஆளுமையும் அறிவார்ந்த மதிநுட்பமும் எந்த பிரச்சினைக்கும் தீர்வு காணும் ஆழ்மன விருப்பமும் கொண்ட அரசியல் தலைமையின் வருகை ஒன்றே பிறந்து வரும் புத்தாண்டுகளின் அர்த்த பூர்வமான நிரந்தர மகிழ்விற்கு வழிசமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.



Related posts:

தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகளாதல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
அரசியல் உரிமை அபிவிருத்தி அன்றாடப் பிரச்சினை அனைத்திற்கும் தீர்வு: அணி திரளுமாறு முல்லை மண்ணில் அமைச...
அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்ப...