வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட க.பொ.த (சாதாரண) மாவணர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, December 8th, 2019

அசாதாரண சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள கல்வி பொது சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள். தொடர்பாக ஆராய்ந்து அவர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்டுத்தியிருக்கும் பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (08.12.2019) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில் மக்களுக்கான இயல்பு வாழ்கையை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அராயப்பட்டுள்ளன.

வெள்ளப் பெருக்கின் பின்னர் ஏற்படக் கூடிய தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகள் இயற்கை அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தால் பாதிப்புக்களை கணிசமான அளவு குறைத்திருக்கலாம் என்று சுட்டிக்க்காட்டிய கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா அவர்கள், எதிர்காலத்தில் அதிகாரிகள் விழிப்புணர்வு செய்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.

Related posts: