வெளிநாட்டு இராஜதந்திர பணிகளில் தமிழ் மக்களது பங்களிப்பும் உள்வாங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

எமது நாட்டின் வெளிநாட்டு இராஜதந்திரப் பணியினைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களின் பங்களிப்பு என்பது இல்லாத நிலையே காணப்படுகின்றது . இதனை கருத்தில் எடுத்து, அதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
2017ஆம் ஆண்டக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலங்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்..
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எமது ஆழிக்குமரன் ஆனந்தன் அவர்களின் ஞாபகார்த்தமாக அங்கு ஒரு நீச்சல் தடாகத்தை அமைத்து, அதனை எமது மக்களது பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ள அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு மீண்டும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்து,
எமது இராஜதந்திரச் சேவையில் அளப்பரிய பங்களிப்புகளை ஆற்றி வருகின்ற அவர், சர்வதேச அரங்குகளிலும் தனது இராஜதந்திர ஆளுமையை நிலைநாட்டி வருகின்றார். அவர் மேலும் பல சிகரங்களை எட்ட வேண்டும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|