அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சபரிமலை செல்லும் குருசாமி பிரதிநிதிகள் சந்திப்பு!

Wednesday, November 28th, 2018

இலங்கையிலிருந்து சபரிமலை ஐயப்ப யாத்திரை செல்லும் யாத்திரைக்குழுக்களின் குருசாமி பிரதிநிதிகள் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சபரிமலை யாத்திரையை தேசிய புனித யாத்திரையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து இன்றைய தினம் குறித்த குருசாமி பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன் போக்குவரத்துக்கான ஒழுங்குபடுத்தல்களை இலகுபடுத்தல் மற்றும் தங்குமிட வசதிகளையும் மேற்கொண்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குருசாமி பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்த அமைச்சர் சபரிமலை யாத்திரையை தேசிய புனித யாத்திரையாக மாற்றியதைப் போல் நிச்சயமாக உங்களது ஏனைய எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு பம்பலப்பிட்டியிலுள்ள இந்துகலாசார திணைக்களத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

viber image4 viber image3 viber image5 viber image6 viber image61 viber image2 viber imag1

Related posts: