கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – பாடசாலை சமூகத்தினருடனும் சந்தித்து கலந்துரையாடல்!

Friday, September 16th, 2022

கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்குமாறு பெற்றோர்கள் பழைய மணவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதுடன் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முதல் நிலை பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற கிளி முருகானந்தா கல்லூரியின் நிர்வாகச் செயற்பாடுகளில் காணப்படும் வினைத்திறன் இன்மை காரணமாக கல்வி மட்டம் வீழ்ச்சியடைந்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள குறித்த பிரதிநிதிகள், இந்நிலையில் இருந்து பாசாலையை  மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்மொழிவுகளையும் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுமாயின், ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் இதுதொடர்பாக ஆலோசித்து மாணவர்களின் ஆரோக்கியமான  எதிர்காலத்திற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்..

000

Related posts:


உள்ளூராட்சி தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன் படுத்தினால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும் ...
தோழர் அமீனின் இழப்பு, எமது இனத்திற்கு மாத்திரமன்றி எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் பாரிய வெற்றிடத்தை ஏற்...
வாழைச்சேனை மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர் சங்கப் பிரதிதிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்து...