வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

தொன்மைவாய்ந்த வெடுக்குநாரிமலை ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தை புனரமைப்பதுடன் அங்கே மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துவருவது தொடர்பாக வேந்தர் சி. பத்மநாதன் மற்றும் இந்துமத திணைக்களப் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
இன்று (01.12.2018) அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல்களில், வெடுக்குநாரிமலை ஆதிகோணேஸ்வரர் ஆலயத்தின் தொண்மையை பாதுகாக்கவும் அங்கே அடியார்களுக்கு வசதியாக படிக்கட்டுக்கள் அமைத்தல், பாதையை சீரமைத்தல், குழாய் கிணறுகளை அமைத்தல் என்பவற்றைச் செய்து சிவராத்திரி பூஜைகள் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்வதுடன் தொல்பொருள் திணைக்களத்தின் தேவையற்ற தலையீடுகளை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
Related posts:
தாயக தேசத்தின் விடிவொன்றே தமிழ் மக்களின் புத்தாண்டு நிமிர்வாகும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ...
ஊழியர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் - வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்களுடனான சந்திப்பில் டக...
அமெரிக்க தமது நலன் சார்ந்து சிந்தித்தாலும், இலங்கை தன்னலன் சார்ந்தே சிந்தித்து செயற்படும் - அமைச்சர்...
|
|
பருத்தித்துறை, குருநகர், பேசாலை பகுதிகளில் விரைவில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர்...
சமூர்த்தி திட்டங்கள் நலிவுற்ற மக்களின் வளமான எதிர்காலத்திற்கானது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பணிகள் - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ...