‘வித்தியாவுக்கு முழுமையான நீதி வேண்டும்’ ஹர்த்தால் அழைப்பை ஈ.பி.டி.பி மகளீர் அணி வரவேற்கின்றது. 

Friday, September 29th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்புக்குரியதாகும். இந்த தீர்ப்பு சமூக விரோதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், பெண்களுக்கு பாதுகாப்பையும் கொடுத்திருப்பதாகவும் அமைந்திருக்கின்றது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தாலும், குற்றவாளிகளுக்கு உதவியவர்களும், குற்றவாளிகள் தப்பிக்க துணைபோனவர்களும் நீதியின் தீர்ப்பை எதிர்கொள்ளவில்லை. அத்தகையவர்களின் பதவிகளும், அரசியல் அதிகாரங்களும் நீதியின் தண்டனையிலிருந்து அவர்களை காப்பாற்றும் அரணாக இருந்துள்ளதாக என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழச் செய்துள்ளது.
எனவே குற்றவாளிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் கல்விபோதிக்கும் போலிகள், போன்றவர்களும் தண்டிக்கப்பட்டு வித்தியாவுக்கான நீதி முழுமையானதாக அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீவக மக்களும், யாழ். பெண்கள் அமைப்பினரும் அனுஷ;டிக்கும் பூரண ஹர்த்தாலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மகளீர் அணி தனது வரவேற்பைத் தெரிவித்துக்கொள்கின்றது.
நாளைய தினம் அனுஷ;டிக்கப்படும் பூரண ஹர்த்தாலானது இயல்பு வாழ்வுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாமலும், பெண்கள் தமது உணர்வுகளை அமைதியாக வெளிப்படுத்தும்வகையிலும் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு எமது மகளீர் அணியினர் தேவையான அனைத்து பங்களிப்புக்களையும் வழங்குவார்கள்.
சுயநல வியாபர அரசியல் நடத்தும் இவர்கள், பணத்துக்காக சமூக விரோதிகளை ஊக்குவிப்பதும், அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கச் செய்வதும், அரசாங்கத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தும் செயலாகவே அமைகின்றது. இவர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடைபெறும் சீர்கேடுகளை நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஆனால் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற சமூக விரோதச் செயற்பாடகளை நாம் கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் இருக்க முடியாது.
பெண்கள் அமைப்புகளின் ஹர்த்தாலானது குற்றவாளிகள் தப்பிக்க துணைபோன குற்றவாளிகளும் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
ஊடகப் பிரிவு
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

Related posts:

இன்னமும் மக்களின் வாழ்வில் முழுமையான மாற்றங்கள் ஏற்படாமையானது ஒரு துரதிஸ்டவசமே – பூநகரியில் டக்ளஸ் எ...
நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்ய பங்களாதேஷின் ஒத்தாசைகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவா...
உலகப் பாலைவனப் பொருளாதாரத்தில் எமது நாட்டின் பொருளாதாரம் மட்டும் சோலைவனமாக இருக்கின்றது எனக் கூற முட...