வாய்ப்புகள் எப்போதும் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது – கிடைக்கும் சூழலை எமக்கானதாக பயன்படுத்திகொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

எல்லா நேரங்களும் வாய்ப்புக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது . வருகின்ற சூழலை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனை பயன்படுத்த தன்னம்பிக்கை நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் பிரதேச நிர்வாக பொறுப்பாளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதனிடையே வடக்கு மாகாணத்தில் நன்னீர் மீன் வளர்ப்பை விருத்தி செய்யும் கடற்றொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளையும் வடமாகாணம் நன்னீர் அபிவிருத்தி சார்பான நிதி ஒதுக்கீடுகளையும் ஒருங்கிணைத்து வேலைத் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயப்பட்டது.
கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும் வடக்குமாகாண துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், இரணைமடு நன்னீர் மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தை விஸ்தரிப்பது மற்றும் புதுமுறிப்பில் மீன் குஞ்சு வளர்ப்பு தொட்டிகளிலையும் சிறப்பாக செயற்படுத்துவது, அதேபோன்று, சாத்தியமான ஏனைய பகுதிகளிலும் நன்னீர் மீன்வளர்ப்பு செய்யக்கூடிய இடங்களை இனங்கண்டு அதனையும் பயன்படுத்தவது போன்ற விடயங்கள் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|