வடக்கில் பாதுகாப்பு கெடுபிடிகள் தளர்வு: பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை! 

Saturday, May 25th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கில் அதிகரிக்கப்பட்டிருந்த சோதனை சாவடிகளின் சோதனை நடவடிக்கைகளை மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாதவகையில் இலகுபடுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத சம்பவங்களை அடுத்து தீவிரப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகளினால் வடபகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளை விட வடக்கில் இந்த நடவடிக்கைகள் அதிகமாக இருப்பதால் எமது மக்களது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தேசிய பாதுகாப்பை பாதிக்காத வகையில் வடக்கில் சோதனை சாவடிகளின் செயற்பாடுகளை இலகுபடுத்த வேண்டும் என நாட்டின் தேசிய பாதுகாப்பு மறுசீரமைப்பு ஆய்வு கூட்டத்தின்போது ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி உடனடியாக பாதுகாப்பு தரப்பினருக்கு வடக்கின் சோதனை சாவடிகளில் மக்களுக்கு நெருக்கடியையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தாத வகையில்  நடவடிக்கைகளை இலகுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய பாதுகாப்பு
மறுசீரமைப்பு ஆய்வு கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர, உள்ளிட்டவர்களுடன் முப்படை மற்றும் பொலிஸ் உள்ளடங்கலான பாதுகாப்பு உயரதிகாரிகள், மாகாணங்களின் ஆளுநர்கள், நீதித்துறைசார் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்திருந்தனர்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் –  வடக்கில் தற்போது காணப்படும் பிரச்சினை வாள்வெட்டும் போதைப்பொளும்தான். தேசிய பாதுகாப்பு என்ற வகையில் வடக்கிலே தொடர்ந்தும் காட்டப்பட்டு வந்த கரிசனை எமது மக்களின் வாழ்க்கை முன்னெடுப்புகளில் பல்வேறு இடையூறுகளை  ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வடக்கில் தேசிய பாதுகாப்பிற்கு குந்தகமான போதைப் பொருள் கடத்தல்கள் போன்ற செயற்பாடுகளும், சமூகச் சீர்கேடுகளான வாள் வெட்டுச் சம்பவங்களும் தடுக்கப்படாத நிலைமையையும் காணக் கூடியதாகவே இருந்தது. அங்கு பயங்கரவாதம் காணப்படவில்லை. வடக்கிலுள்ள மக்கள் பேதங்களற்று சகோதரத்துவத்துடன்தான் வாழ்ந்துவருகின்றனர்.

அந்தவகையில் பாதிப்புக்கள் ஏதும் காணப்படாத வடக்கில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டின் ஏனைய பகுதிகளை விட அதிகரித்திருப்பதானது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts:


குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் செயல...
மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ள...
தேசிய உற்பத்தியுடன் கூடிய சுய பொருளாதார வளர்ச்சி நாட்டுக்கு எவ்வளவு அவசியமோ, அதேபோன்று தேசிய நல்லிணக...