வவுனியா மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உடனடி தீர்வு!

வவுனியா, சுதந்திரபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள முன்பள்ளிக்கான குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை ஏற்பாடு செய்வதற்கும், பிரதேசத்தின் அவசர தேவைகளுக்காக இரண்டு முச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளார்.
மேலும், பல்கலைக் கழகம், கல்வியியற் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாதாந்த உதவிக் கொடுப்பானவு வழங்குவதற்கும் உறுதி அளித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் இந்த உறுதி மொழிகளை வழங்கியுள்ளார்.
மேலும், சுதந்திரபுரம் பிரதேச மக்களினால் வீட்டுத் திட்டம், வீதி புனரமைப்பு, வேலை வாய்ப்பு, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அவற்றை ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக தீர்க்க கூடிய விடயங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
அத்துடன் ஏனைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.
அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற நிலையில் மக்கள் வீணை சின்னத்திற்கு வாக்களிப்பதன் ஊடாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|