தேசிய நல்லிணக்கமே நிரந்தர தீர்வுவைக் காண்பதற்கு இருக்கும் ஒரே வழி – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, February 11th, 2021

எம்மிடத்தே பல்வேறான பிரச்சினைகள் கருத்த வேறுபாடுகள் காணப்பட்டாலும்  அவ்வாறான பிரச்சினைகளுக்கான தீர்வை காண்பதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியம். அது சரணாகதியோ அடிமைத்தனமோ அல்ல என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பேச்சுவார்தைகளினூடாகவும் புரிந்துணர்வின் ஊடாகவும் எமது பிரச்சினைகளை வெளிப்படுத்தி அந்த பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை எட்டமுடியும் என்பதே யதார்த்தமான வழிமுறை என்றும் தெரிவித்துள்ளார்

கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் பிரதேசங்களின் பொறுப்பாளர்கள் உதவி பொறுப்பாளர்கள் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று இன்றையதினம் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சமகால அரசியல் நிலைப்பாடுகள் கட்டசியின் அரசியல் முன்னகர்வுகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் –

தேசிய நல்லிணக்கத்தினூடாக எமது மக்களது பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற எண்ணத்துடனேயே அன்று உருவான இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டோம். துரதிஸ்டவசமாக தவறான வழிடத்தல் காரணமாக அந்த வழிமுறை தோற்றுவிட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் தோற்றுவிடவில்லை.

தன்னைப் பொறுத்த வரையில் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையை முழுமையாக பயன்படுத்துவதை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பூரணமாக அடைந்து கொள்வதை நோக்கி நகர முடியுமெனவும் சுட்டிக்காட்டியதுடன் கடந்த காலத்தில் சில தமிழ் தலைமைகளின் சுயநலன் சார்ந்த – தவறான அணுகுமுறைகளே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்வதற்கு காரணமாக இருப்பதனை தன்னால் அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச நாடுகள் அனைத்தும் தங்களது சுயநலன் சார் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்படுகின்றன.. ஆனாலும் சர்வதேச நாடுகளை சாமர்த்தியமாக கையாள வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு என்பது தென்னிலங்கையுடன் ஏற்படுத்திக் கொள்ளும் தேசிய நல்லிணக்கத்தினூடாக மாத்திரமே சாத்தியமாகுமெனவும், சர்வதேசத்தினூடாக அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது வெறும் பித்தலாட்டம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

திருக்கோணேஸ்வரத்தின் மஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
அரசியல் கைதிகளின் உணர்வுகளை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான் - விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன்...