வவுனியா பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும் அமைச்சர் டக்ளஸ் உறுதி!
Tuesday, June 9th, 2020
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதுடன்
கடந்த வாரத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து மக்களின் பயன் பாட்டுக்கு வழங்கவேண்டும் என்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருந்ததையும் அதற்கமைய விரைவில் பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வவுனியா மத்திய பொருளாதார நிலையத்தில் கடைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் புறக்கணிக்கப்பட்ட வர்த்தகங்களுக்கு நியாயம் கிடைக்கும்வகையில் எஞ்சியிருக்கும் கடைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
இதனிடையே வவுனியாவில் ஓமந்தையில் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறந்து வைக்காமலே காடு பற்றிப்போயுள்ள சர்வதேச விளையாட்டு மைதானம் மற்றும் உள்ளக அரங்குகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


