வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகத்தான வரவேற்பு!
Thursday, November 8th, 2018
புதிய அரசில் வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் இந்துவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வவுனியா மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
வவுனியா வரவேற்பு வளைவு மண்டபம் முன்றலில் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து வவுனியா மக்களால் மிக மகிழ்ச்சிகரமாக வரவேற்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மோட்டார் சைக்கிள் பவனி ஊர்வலமாக பிரதான வீதி வழியாக வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதிவிநாயகர் கோவிலடிவரை அழைத்துவரப்பட்டு அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசி வேண்டி சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
அதன் பின்னர் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வவுனியா பிரதான பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகை நிகழ்வுகளில் கலந்துகொண்டதுடன் மௌலவி அமீர் கபீஷ் உள்ளிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்தினருடனும் பொதுமக்களுடனும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.






Related posts:
|
|
|


