கொவிட் 19 காரணமாக தாமதமாகிய நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, May 12th, 2020

நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு ஆகிய களப்புக்களை புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்;த களப்புக்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் புனரமைப்பு நடவடிக்கைகளில் தொய்வினை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(12.05.2020) இடம்பெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, உடனடியாக புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களையும் அமைச்சர் வழங்கியுள்ளார்.

குறிப்பாக, நாரா எனப்படும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி, அகழப்படுகின்ற சேற்று மணலை கொட்டுகின்ற இடத்தினை தெரிவு செய்து அங்கு கொட்டுவதற்கான சுற்றுச் சூழல் திணைக்களத்தின் அனுமதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம், கரையோர பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையீனம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் உள்ள நாயாறு மற்றும் நந்திக்கடல் நீர் நிலைகளில் சுனாமி அனர்த்தத்தினால் கரையொதுக்கப்பட்ட பெருமளவு ஆழ்கடல் பொருட்களும் மணல் படுக்கைகளும் தேங்கி கிடக்கின்றன.

இதன்காரணமாக குறித்த களப்பு பிரதேசத்தில் நீர்வாழ் உயினங்களின் உற்பத்தி குறைவடைந்து வருவதாக குறித்த நீர்நிலைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருப்பட்ட நிலையில் குறித்த களப்பு நீர் நிலைகளை புனரமைப்பு செய்வதில் அமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருக்கின்றார்.

குறித்;த நீர்நிலைகள் இரண்டும் பூரணமாக புனரமைக்கப்படுகின்ற நிலையில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தொண்டமானாறு களப்பினுள் பழைய பாலம் ஒன்று விழுந்து காண்படுவதனால் அதனை அகற்றுவதற்கு தேவையான 20 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

முப்படைகளிலும் தமிழரது பிரதினி தித்துவம் உறுதிப்ப டுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுளேன்
அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்துவதே எமது நோக்கம் - வவுனியாவில் அ...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது - டக்ள...
உழைப்பவர் தினத்தில் உரிமைகள் பெற்றிட உறுதி கொள்வோம் - மேதின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
இந்து சிவாச்சாரியர்களுக்கு தேவையான அங்கீகாரம் வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!