வழிகாட்டியாக மட்டுமன்றி எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தரக் கூடியவராக இருக்கும் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஒருவரே!

Saturday, January 20th, 2018

நாம் என்ன நோக்கத்திற்காக வாக்களித்து யாரை வெற்றிபெறச் செய்தோமோ அவர்கள் இன்று எம்மை நட்டாற்றில் விட்டுள்ளனர் என யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டம் பகுதியில் இன்றையதினம் (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நாம் கடந்த பல ஆண்டுகளாக சொந்தக்காணிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றோம். இந்தக் காணிகளுக்கு நாம் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் காணி  உரிமங்களை பெற்றுத் தருவோம் எனக் கூறி எமது வாக்குகளைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது கோரிக்கைகள் தொடர்பில் தேர்தலுக்கு பிந்தியதான காலப்பகுதியில் எதனையும் பெற்றுத்தரவில்லை.

அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் நாம் அவர்களுக்கு ஆதரவு வழங்குவனூடாக எதனையும் பெற்றுக்கொள்ள முடியாதென்பதை நாம் உணர்ந்துகொண்டுள்ளோம்.

இந்நிலையில்தான் எமக்கான வாழ்வுக்கு வழிகாட்டியாக மட்டுமன்றி எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தரக் கூடியவராக டக்ளஸ் தேவானந்தாவை முன்னுரிமைப்படுத்தி அவரது கட்சியின் வீணைச்சின்னத்தை வெற்றிபெறச் செய்வதற்கு முடிவு செய்துள்ளோம்.

இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதி செய்வதாக மக்களாகிய நாம் எல்லோரும் ஒருமித்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் அந்த மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதில் கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெற்றிகொள்ளும் பட்சத்தில் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு நிச்சயம் உரிய தீர்வினைப் பெற்றுத் தருவோம். அதற்காக எமக்கு மக்களின் ஆணையும் அரசியல் பலமுமே தேவை .

எனவே மக்கள் எமக்கு ஒன்றிணைந்து ஆதரவை தரும் பட்சத்தில் காணி உரிமம் மட்டுமல்லாது நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்ககும் நிச்சயம் நாம் தீர்வினைப் பெற்றுத் தருவோம் என்று டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளதுடன் நாம் கொடுக்கும் வாக்குறுதிகள் தேர்தல் வெற்றிக்கான வாக்குறுதிகள் அல்ல. மாறாக வழங்கப்படும் வாக்குறுதியை நிச்சயம் செயற்படுத்துவோம் என்ற நம்பிக்கையுடனேயே அந்த வாக்குறுதியை வழங்குகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: