அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் – இடையூறுகள் இருப்பின் அறியத்தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Saturday, March 6th, 2021

அரசாங்கத்தின் திட்டங்களை பயனபடு்த்திக் கொள்ளத் தவற வேண்டாம் என்று தெரிவித்துள்ள   கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஏதாவது இடையூறுகள் இருப்பின் தனக்கு அறியத்தருமாறும் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சௌபாக்கியா வாரத்திற்கான கரைச்சிப் பிரதேச செயலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறித்த நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட பத்து மாணவர்களுக்கு ‘கல்விக்கான கதவு’ கொடுப்பனவு திடடத்திற்கமைய கொடுப்பனவுகள் வங்கப்பட்டன.

அதேபோன்று, வைகறை கடன் வழங்கும் திட்டத்திற்கு அமைய தெரிவு செய்யப்பட்ட மூன்று சமூக அமைப்புக்களுக்கான  காசோலைகளும், ‘பிரகாசம் கடன் திட்டத்திற்கு அமைய இரண்டு பயனாளிகளுக்கான காசோலைகளும், கதிர் கடன் திட்டத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காசோலைகளையும் வழங்கி வைத்ததுடன்  சபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் அடிப்படையில் வீடுகளை நிறைவு செய்த இருவருக்கான வீட்டுத் திறப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே அரசியல் தலைமைகளின் தவறான தீர்மானங்களினால் சொல்லொணாத் துன்பங்களையும் கணக்கெடுக்க முடியாத இழப்புகளையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கிடைத்திருக்கின்ற வாய்ப்புக்களை பயன்படுத்தி மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப முயற்சிப்பதாகவும், யதார்த்தத்தினை புரிந்து கொண்டு மக்கள் சரியான தெரிவுகளை மேற்கொண்டு பயனடைந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சௌபாக்கியா வாரத்திற்கான கண்டாவளைப் பிரதேச செயலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்’

அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்சத்தை நோக்கி எனும் தொனிப்பொருளின் கீழ், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சௌபாக்கியா வாரத்திற்கான பூநகரி பிரதேச செயலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்விலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடயே கிளிநொச்சி இளைஞர் கழக மாவட்ட சம்மேளத்தினல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சதுரங்கப் போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட கடறறொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


துணைவியாரின் பிரிவால் துயருற்றிருக்கும் சீ.வீ.கே.சிவஞானத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆறு...
வரி விதிப்புகளும், பொருட்களின் விலையேற்றமும் மனித வளத்தை நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது – நாடாளுமன்றில...
இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதாக கச்சதீவு செல்...