வளம் மிக்க முல்லை மண்ணை கட்டியெழுப்ப எம்முடன் கைகோருங்கள்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, March 9th, 2020

வளம் நிறைந்த முல்லை மண் கடந்தகால தலைமைத்துவத் திறனற்ற அரசியல்வாதிகளின் வழிநடத்தல்களாலும் சுயனலன்களாலும் பாழாக்கப்பட்டுக்கிடக்கிறது. இந்த அவல நிலையிலிருந்து மக்களை மீட்டெடுத்து மக்களுக்கு சிறந்த வாழ்வியல் நிலையை உருவாக்கிக்கொள்ள எம்முடன் இணைந்து பயணிக்க ஒன்றுபட்டு உழையுங்கள் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உடையார்கட்டு பெரிய கைவேலி பகுதியில் நடைபெற்ற மக்களது வாழ்வாதாரம் மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பான மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது மக்களது பிரச்சினைகளை மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்தபின் கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

மக்களது பிரச்சினைகள் மட்டுமல்லாது எமது மக்கள் எதிர்கொள்ளும் அதின பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான சிறந்த பொறிமுறை எம்மிடம் உண்டு.

அதுமட்டுமல்லாது சிறந்த வழிநடத்தல்களூடாக எமது மக்களை வளமான வாழ்க்கை நிலைக்கு அழைத்க்த்குச் செல்லும் வழிமுறையும் எம்மிடம் உண்டு.
அதற்காக நாம் உழைக்க தயாராகவே இருக்கின்றோம்.

எமது இந்த தூர நோக்குள்ள சிந்தனைக்கும் உழைப்பிற்கும் மக்களாகிய நீங்களும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நான் நாடாளுமன்றம் செல்வது எனது தேவைக்காக அல்ல. நான் மக்களாகிய உங்களுக்காகவே தேர்தல்களில் முகம்கொடுக்கின்றேன்.

ஈழமக்கள் ஜனனாயக கட்சியின் வெற்றி என்பது மக்களது வெற்றி. அந்தவகையில் உங்கள் எதிர்காலத்தை வெற்றிகொள்ள எமது ஈழமக்கள் ஜனநாயக கட்சியை அரசியல் ரீதியில் பலப்படுத்துங்கள்.

அவ்வாறு நீங்கள் எமது கரங்களை பலப்படுத்தினால் உங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வை பெற்றுத்தருவோம்
என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இப்பகுதியில் நன்னீர் மீன்பிடியை மேற்கொள்ள நன்னீர் நீர்நிலைகள் இருப்பதால் இப்பகுதி மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் நன்னீர் மீன்வழர்ப்பு மேற்கொள்ளும் திட்டத்தையும் மேற்கொள்ள முயற்சி எடுப்பதுடன் அரச சேயையாளர்கள் பாகுபாடற்ற சேவைகளை முன்னெடுக்கவு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:


பிராந்திய விளையாட்டுக் கழகங்கங்களும் வலுமை மிக்கதாகக் கட்டியெழுப்பப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ள...
காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை வடக்கு மாகாண சபையிடம் ஒப்படைக்கவும் - ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா...
அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!