வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் புத்தாண்டுக்கான 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முன்பதாக வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு புத்தாண்டுக்கு கொடுப்பனவாக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் சித்திரைப் புத்தாண்டு விடுமுறை காலப்பகுதியில் அரசாங்கம் இவ்வாறு அவசர தீர்மானங்களை மேற்கொள்வதனால் தமது தரப்பினர் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறி இந்த நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு கிராம சேவகர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், மற்றும் சமுர்த்தி வங்கி அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்
இன்று விடுமுறை நாள் என்ற போதிலும் துறைசார் அதிகாரிகள் இந்த கொடுப்பனவை வழங்குவதில் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன் கிராம சேவகர்கள் பிரிவிற்கு சென்றும் குறித்த நிவாரண கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கையில் குறித்த அதிகாரிகள் ஈடுபட்டும் வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தால் வழங்கப்படும் குறித்த நிதியானது பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு ஒரு சிறிய உதவியாகவும் இது அமைந்துள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|