நாடாளுமன்றத்தில் பேசுவது போன்று அம்மணமாகப் பேச வேண்டாம் – கயேந்திரன் எம்பிக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுரை!

Friday, December 29th, 2023

“காடையர்களை” வெளியேற்றுங்கள் என கடற்றொழிலாளர் பிரதிநிதி ஒருவரை பார்த்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி கூறியதால் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதன்போது தலையீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினரை பார்த்து நீங்கள் ஏன் அவர்களைக் காடையர்கள் எனப் பேசினீர்கள்? அவர்கள் சமூக அமைப்பு பிரதிநிதிகள். அதனால் இந்த கூட்டத்துக்கு வருகை தந்தார்கள் என தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத்தில் பேசுவது போன்று அம்மணமாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் மற்றவர்களைக் கோபப்படுத்தும் சொற் பிரயோகங்களை அபிவிருத்தி குழு கூட்டங்களில் தவிர்த்துக் கொள்ளுங்கள் என இரு தரப்பினரையும் சமரசம் செய்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலே இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது  – குறித்த கூட்டத்தில் கடத்தொழிலாளர் சார்பில் தமது பிரச்சினையை முன்வைத்த பருத்தித் துறை கடற் தொழிலாளர் சங்கப் பிரதிநிதி தமது மீனவர்கள் எதிர் நோக்குகின்ற இந்திய அத்து மீறிய மீனவர்கள் தொடர்பில் தமிழ் கட்சிகள் தமிழ்நாடு சென்று பேச முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கினைப்புக் குழுத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த கோரிக்கையை தான் நாடாளுமன்றத்தில் முன் வைத்ததாகவும் அதற்கு சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் சிலர் சம்மதம் தெரிவிக்கவில்லை என தெரிவித்தார்.

இதற்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அதிகாரத்தில் இருக்கும் உங்களால் செய்ய முடியவில்லை என்றால் நாங்கள் ஏன் இந்தியா சென்று பேச வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் குறித்த விடையம் தொடர்பில் நான் அமைச்சர் அல்லாத காலத்திலும் பேசி வருகிறேன் இந்தியாவில் இந்த விடயம் கடற்படை கைது செய்கிறார்கள் என்றவாறே பார்க்கப்படுகிறது.

ஆதலால் இந்த பிரச்சனையை எமது மீனவர்கள் பிரச்சனையாக தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசு தலைவர்களுக்கு ஒருமித்து கூறினால் எமது பிரச்சனை தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எட்ட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

இதன் போது சற்று கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்படையை வெளியேற்றச் சொல்லுங்கள் நாங்கள் இந்தியா செல்வது தொடர்பில் தீர்மானிப்போம் என்றார்.

இதன் போது அமைச்சர் டக்ளஸ் நீங்கள் எப்பொழுதும் நடைமுறை சாத்தியமில்லாத விடயங்களை பற்றி பேசியே மக்களை தொடர்ந்தும் இருண்ட யுகத்திற்கு இட்டுச் செல்ல முயற்சிக்கிறீர்கள் என்றார்.

இந்நிலையில் ஆபோசமடைந்த கடற் தொழில் சங்கப் பிரதிநிதி ஒருவர் சபை கஜேந்திதரனை நோக்கி நீங்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்கிறீர்களா அல்லது எங்கள் மக்களை சாகடிக்க நினைக்கிறீர்களா என கேள்வி எழுப்பினார்.

இதான் போது கோபமடைந்த கஜேந்திரன் எம்பி அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் காடையர்களை ஏன் அழைத்தீர்கள் இவர்கள் இங்கு பேச முடியாது என கடும் தொணியில் தெரிவித்தார்.

இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில் மீனவ சங்கப் பிரதிநிதியும் தனது பங்கிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கயேந்தினை பேசிய நிலையில் அமைதியின்மை தொடர்ந்து மேற்பட்டது.

இதன்போது தலையீடு செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினரை பார்த்து நீங்கள் ஏன் அவர்களைக் காடையர்கள் எனப் பேசினீர்கள் அவர்கள் சமூக அமைப்பு பிரதிநிதிகள் அதனால் இந்த கூட்டத்துக்கு வருகை தந்தார்கள் என தெரிவிதிருந்ததுடன் நாடாளுமன்றத்தில் பேசுவது போன்று அம்மணமாக பேசுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் மற்றவர்களைக் கோபப்படுத்தும் சொற் பிரயோகங்களை அபிவிருத்தி குழு கூட்டங்களில் தவிர்த்துக் கொள்ளுங்கள் என இரு தரப்பினரையும் சமரசம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: