வரவு – செலவுத் திட்டத்தில் இன சமத்துவம் – வரவேற்கின்றார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, November 18th, 2023

நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு நடவடிக்கைகளுக்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தெடர்பில் இதுவரையில்  அவர்களது உறவினர்களில் 181 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 170 உறவினர்களுக்கு இந்த வருடத்தில் இழப்பீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ள நிலையில், ஏனையோருக்கும் இழப்பீடுகளை வழங்குவதைத் துரிதப்படுத்தும் வகையில் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி நகரினை சுற்றுலாத்துறை சார்ந்த நகரமாக அபிவிருத்தி செய்வதற்கென 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கீழ் மல்வத்து ஒயா திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

அதேபோன்று மாகாண மட்டத்தில் கிரிக்கெற் விளையாட்டினை அபிவிருத்தி செய்வதற்கும், ஏனைய துறைகள் பல சார்ந்த முன்னெடுப்புகள் தொடர்பிலும் மிகுவான அக்கறையினை இந்த வரவு – செலவுத் திட்டம் செலுத்தியிருப்பது தொடர்பில் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அந்த வகையில் நாடளாவிய ரீதியில் அனைத்து மக்களையும் இந்த நாட்டின் ஒருமித்த மக்களாகக் கருதி இந்த அரசாங்கம் தனது வரவு – செலவுத் திட்டத்தினை முன்வைத்திருப்பது வெகு தெளிவாக விளங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தேவைப்பாடுகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன்? – டக்ளஸ் எம்.பி கேள்வி!
அதி வேகப் பாதைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் வாகன நெரிசல்கள் குறைந்துள்ளனவா? - டக்ளஸ் எம்.பி. ...
இரணைமடுக் குளத்தின் மேலதிக நீரை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் ஏதுநிலைகள் குறித்து அமைச்சர் ட...