வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் தொடர்புமில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 30th, 2018

வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈபிடிபி க்கும் எந்தத் தொடர்புமில்லை. அவ்விதமான சம்பவங்களுடன் ஈ.பி.டி.பி யை தொடர்புபடுத்தி கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஒன்று அறியாமையினாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவுமே கூறப்படுகின்றது என்றே கருதுகின்றேன் என அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் கொண்டுவந்ததாக கூறும் ஆட்சியில், எந்த மக்கள் தமக்கு வாக்களித்து அதிகாரத்திற்கு கொண்டுவந்தார்களோ அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்கள் தீர்வுபெற்றுக் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தியுற்ற மக்கள் வீதிக்கிறங்கி அவர்களுக்கெதிராகவே போராடும் நிலை வடக்கு கிழக்கில் உருவாகிவிட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பே எமது கட்சியின்மீது  கொண்ட அச்சம் காரணமாகவே உருவாக்கப்பட்டது. அவர்கள் கடந்த காலங்களில் எம்மீது அரசியல் அச்சம் காரணமாக பல அவதூறுகளை சுமத்தியிருந்தார்கள்.  ஆனாலும் அவை தொடர்பில் எதுவும் இன்றுவரை நீதிமன்று சென்று கூட நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது எமக்கு கிடைத்த ஒரு சிறுகாலப்பகுதியில் நாம் மக்களுக்கான தேவைப்பாடுகளை மிகவிரைவாக செய்துகொண்டிருப்பதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அச்சம் கொண்டதன் வெளிப்பாடே மறுபடியும் இவ்வாறான அவதூறுகளை எம்மீது சுமத்த முற்படுகின்றனர். அந்தவகையில்தான் தற்போது வட்டுக்கோட்டை சம்பவம் என்று எம்மீது அவதூறுகளை பரப்பிவிட்டுள்ளனர். ஆனாலும் எமது மக்கள் இன்று இவர்களது போலித்தன்மையை உணர்ந்து விட்டார்கள் என்றார்.

Related posts:

முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...
அரசியல்பலத்தை மக்கள் வழங்கினால் வலி. வடக்கின் எஞ்சிய பிரதேசங்களையும் விடுவிக்க முடியும் – அமைச்சர் ட...
தினகரன் பத்திரிகையின் வட பகுதிக்கான விஷேட பதிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஹெகலிய ரம்புக்...