வடமராட்சி பிரதேச கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Saturday, March 7th, 2020

மட்டுப்படுத்தப்பட்ட முனை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராச்சி கிழக்கு பிரதேச கடற்றொழிலாளர்கள் தமது பகுதி கடலில் அத்துமீறிய மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விசேட சந்திப்பொன்று இன்றையதினம் மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் பார்வைக்கு கொண்டுவந்தனர்.

குறிப்பாக –

கரைவலை தொழிலில் உழவு இயந்திரம் பயன்படுத்தல், எல்லைதாண்டிய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத நடவடிக்கைகள், சட்டவிரோத உபகரணங்கள் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதை தடுத்தல் அட்டைத் தொழிலுக்கான அனுமதியை இரத்துச் செய்தல், மயிலிட்டி துறைமுக பாவனை தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன் அவற்றை தடுப்பதற்கான முயன்சிகளையும் மேற்கொண்டு தமது தொழில்துறையை பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த கடல்தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய  அமைச்சர் கருத்துக் கூறுகையில் –

நீண்டகாலமாக இருந்துவரும் இதுபோன்ற பிரச்சினை மட்டுமல்லாது எமது மக்களுக்கு இன்னமும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது. இவை அனைத்தும் தீர்க்கப்படக்கூடியவைதான்.

உங்கள் எதிர்காலத்தை நீங்களே நிர்ணயித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உங்களது வீடுகளின் கதவுகளை தட்டி நிற்கின்றது. அந்த அந்தர்ப்பங்களை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் குமார் மற்றும் குறித்த சமாசங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: